ஒரிஜினலை விட இந்த டான்ஸ் வீடியோ சூப்பரா இருக்கே..! – “ஜிமிக்கி கம்மல்” பாடலுக்கு இந்த கேரளா சேச்சிகள் போட்ட செம டான்ஸ் – அதுவும் அந்த உருண்ட சேச்சி வேற லெவல் !!

Viral videos

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள படத்தில், `எண்டம்மையிட ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடல் இடம்பெற்றது. இதில் கடைசி இரு காட்சியில் மட்டுமே மோகன்லால் தோன்றியிருப்பார்.

அண்மையில், கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாப்பட்டது. கொச்சியில் உள்ள ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’ கல்வி நிறுவனத்தின் மாணவிகள், ஆசிரியர்கள் `ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடியதுடன் அதன் வீடியோவை யு டியூப்பில் பதிவேற்றியிருந்தனர்.

அப்பாடல் யு டியூப், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் வைரலானது. கல்லூரி பெண்கள், ஆசிரியர்கள் நடனமாடிய இப்பாடல் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும், படத்தில் இடம்பெற்ற ஒரிஜினல் பாடல் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

அதில் ஒரு வீடியோ கேரளாவையும் தாண்டி தமிழகத்திலும் பிரபலம் ஆனது,அந்த வீடியோவில் நடனம் ஆடிய ஷெரில் என்பவர் மாநில எல்லைகளை தாண்டி பிரபலம் ஆனார்.

பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகியாகவே மாறினார் ஷெரில். இதில் உச்சபட்சமாக மணிரத்னம் இயக்கப்போகும் படத்திலும் ஷெரில் நடிக்கப்போவதாக கூட தகவல் வெளியானது.