பைக் மீது கார் மோ தி ப ய ங் க ர வி ப த் து !! ப த ற வைக்கும் சிசிடிவி காட்சி !! இந்த மாதிரி எத்தனை வீடியோ பார்த்தாலும் !! இவனுங்கள திருத்தவே முடியாது போங்க !!

Viral videos

கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கரையம்பாளையம் பகுதியை சேர்ந்த அருண் மற்றும் வாழப்பாடி சிங்கிபுரம் பகுதியைச் சார்ந்த அஜித்குமார் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் 25-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சொந்த மாவட்டத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சங்ககிரி அடுத்து காளிகவுண்டம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தை முந்திக் கொண்டு வேகமாக வந்த கருப்புநிற கார் கண்மூடித்தனமாக மோதியது.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பின்னால் வந்த கார் ஒன்றில் உள்ள கேமிராவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக காட்சிகளைக் கொண்டு சேலம் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் விபத்து சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் காளிகவுண்டம்பாளையம் பகுதியில் நிகழ்ந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மகுடஞ்சாவடி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய காரின் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமானது என்பதும் காரில் 4 பேர் பயணித்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் காரை ஓட்டி சென்றுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு காரை ஓட்டி வந்த சதீஷ்குமார், காரின் உரிமையாளர் வினோத், உடன் வந்த அருண்குமார், கெளதம்ராஜ் இரண்டு பேர் என நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும், இந்த விபத்தில் காட்சிகளோடு தகவல் அளிக்கப்பட்டதால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதோ அந்த வீடியோ !!